பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளுக்கு ரூ.750 கோடி கிடைக்குமா?

Added : செப் 15, 2020
Share
Advertisement
 ரேஷன் கடைகளுக்கு ரூ.750  கோடி கிடைக்குமா?

சென்னை:கூட்டுறவு சங்கங்களுக்கு, 750 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படாததால், ரேஷன் கடைகளை நடத்துவதில், நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவுபண்டக சாலைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் போன்றவை, ரேஷன் கடைகளை நடத்துகின்றன. அவற்றில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள், சேவை நோக்கத்துடன் செயல்படுகின்றன. இதனால், ரேஷன் ஊழியர்கள் சம்பளம், கடை வாடகை, மின் கட்டணம், போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களை சமாளிக்க, சங்கங்களுக்கு ஆண்டுதோறும், தமிழக அரசு, மானியம் வழங்குகிறது. இரு ஆண்டுகளாக, சங்கங்களுக்கு மானியம் வழங்கப்படாததால், அவற்றுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால், வாடகை உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல், சங்கங்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இது குறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர், ராஜேந்திரன் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்களுக்கு, இரு ஆண்டுகளாக, 750 கோடி ரூபாய் அளவுக்கு மானியம் வழங்கப்படாததால், ஊழியர்களுக்கு, சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும், ஊழியர்கள் நலன் சார்ந்த எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. மொத்த மானியத்தையும் உடனே வழங்கவில்லை என்றாலும், பாதி தொகையையாவது விரைவாக விடுவிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், ரேஷன் கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசிடம் இருந்து, குறித்த காலத்தில் மானியம் கிடைக்கிறது. அந்த நிதி, சங்கங்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படுவதால், ரேஷன் கடைகளை நடத்துவதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X