கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மழையில் போதை பொருள் சேதம் மூவரை விடுவித்தது நீதிமன்றம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை:போலீசார் கைப்பற்றிய போதைப்பொருள், மழையில் சேதமானதால், குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்து, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு, 100 அடி சாலையில், நாதெள்ளா பஸ் நிறுத்தம் அருகே, 2005 ஏப்ரலில், சுமதி, 40; சுகந்தா, 41; பாலாஜி, 20, ஆகியோர், சட்ட விரோதமாக, ௪ கிலோ கஞ்சா வைத்திருந்ததாகவும், அதை வேறொருவருக்கு விற்க முயன்றதாகவும், கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி வி.தேன்மொழி முன் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:வழக்கின் ஆவணங்களில், பல்வேறு குழப்பங்கள் உள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும், வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. வழக்கு பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் கழித்து, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருள், மழையில் சேதமானதால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை;

இது தொடர்பாக நீதிமன்றத்திற்கும் தகவல் தெரிவிக்க, அரசு தரப்பு தவறிவிட்டது. இந்த வழக்கு உண்மையா என, 14 ஆண்டுகள் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. எனவே, சந்தேக பலனை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி, அவர்களை விடுதலை செய்கிறேன்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X