பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய வேலை: 2 லட்சம் பேர் எதிர்பார்ப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை:கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, இரண்டு லட்சம் பட்டதாரிகள், மின் வாரியம், தேர்வை எப்போது நடத்தும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக மின் வாரியம், 500 இளநிலை உதவியாளர் - கணக்கு, 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர் பதவிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக, விருப்பமுள்ள பட்டதாரிகளிடம் இருந்து, நடப்பாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.உதவியாளர் - கணக்கு பதவிக்கு, 32 ஆயிரம் பேர்; கணக்கீட்டாளருக்கு, 79 ஆயிரம் பேர்; உதவி பொறியாளர் பதவிக்கு, 1.03 லட்சம் பேர் என, மொத்தம், 2.14 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

அவர்களுக்கு, மே மாதத்திற்குள், கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்க முடிவு செய்யப்பட்டது.தொற்று பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனால், மின் வாரியத்தால்,திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடிய வில்லை. இம்மாதம் முதல், ஊரடங்கில்பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது:மற்ற துறைகளை விட, மின் வாரிய தேர்வு வெளிப் படையாகவும், நேர்மையாகவும் உள்ளது. இம்மாதம், 'இ -- பாஸ்' ரத்து உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல், மின் வாரியம், விரைவாக எழுத்து தேர்வு நடத்தி, ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு நடத்த மேலும் தாமதம் ஏற்படும் என்றால், அதற்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்க முடியும். தேர்வு குறித்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில், அவற்றை மீண்டும் வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X