சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு 465 நாள் சிறை

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஆதம்பாக்கம் " வேளச்சேரி, பவானி நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ், 21. இவர் மீது, போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் உள்ளன.

கடந்தாண்டு டிசம்பர், மவுன்ட் துணை கமிஷனர் பிரபாகர் முன், பால்ராஜ் ஆஜரானார். 'தான் திருந்தி வாழ்வதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு, எந்தவித குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன்' எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

இந்நிலையில், கடந்த மாதம், ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், குற்றச்செயலில் பால்ராஜ் ஈடுபட்டதால், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தை மீறி செயல்பட்டதால், பால்ராஜை, 465 நாட்கள் ஜாமினில் வர முடியாதபடி, சிறை தண்டனை விதித்து, துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X