சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாப பலி; மாநகராட்சி கமிஷனருக்கு 'நோட்டீஸ்'

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை : புளியந்தோப்பில், மின் கசிவால் பெண் உயிரிழந்தது தொடர்பாக, சென்னை மாநகராட்சி கமிஷனர் பதிலளிக்க, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, புளியந்தோப்பு, பெரியார் நகர், ஹவுசிங் போர்டு, இரண்டாவது பிளாக்கில் வசித்தவர் அலிமா, 35. இவர், நேற்று முன்தினம் காலை, நாராயணசாமி தெருவில் நடந்து சென்றார். அப்போது, தரையின் கீழ் உள்ள மின்சார கேபிளில் ஏற்பட்ட மின் கசிவால், மின்சாரம் பாய்ந்து, அலிமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள, தெருவிளக்கு மின் பெட்டி நிலை குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதையடுத்து, மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது, கவனக்குறைவாக செயல்பட்ட, அந்த பகுதி உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கடராமன் ஆகியோர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுஉள்ளனர்.மாநகராட்சியில், 2.85 லட்சம் தெருவிளக்குகளும், 7,220 மின்பெட்டிகளும் உள்ளன. பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் என, 700 பேர் தினமும், பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், எந்த இடத்திலும் மின் கசிவோ, பழுதோ இல்லை.இவ்வாறு, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள, மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் துரை ஜெயச்சந்திரன், சென்னை மாநகராட்சி கமிஷனர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ஆகியோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது. அதில், 'சம்பவம் தொடர்பாக, இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X