பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுனர்களுக்கு தபால் ஓட்டு?

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை:தங்களுக்கு, வரும் தேர்தலில், தபால் ஓட்டு வழங்க வேண்டும் என, வாடகை வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலர், ஜூட் மேத்யூ, தேர்தல் கமிஷனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகம் முழுதும், தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தும் கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள், தங்களின் ஓட்டுகளை பதிவு செய்ய முடிவதில்லை. எனவே, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுனர்களுக்கு, தபால் ஓட்டளிக்கும் உரிமையை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X