சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை:தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் , தமிழக அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகங்கள், பணிமனைகள், கோட்ட அலுவலகங்களின் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, போக்குவரத்து கழக, ஓய்வுபெற்ற நல அமைப்பின் செயலர், கர்சன் கூறியதாவது: தமிழகம் முழுதும், 85 ஆயிரம் பேர், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்கள், 53 மாதங்களாக வழங்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் முதல், 6,623 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான, வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட, 1,654 கோடி ரூபாய்க்கான பணப்பலன்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

ஓய்வூதிய சீரமைப்பு குழு, 2009ல் அளித்த பரிந்துரையை, இன்னும் அமல்படுத்தவில்லை. ஓய்வூதியத்துக்கான ஊதிய ஒப்பந்த உயர்வும் வழங்கப்படவில்லை. இவை குறித்து, அதிகாரிகளுக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி, அஞ்சல் அட்டை வழியாக கோரிக்கை அனுப்பியும், கண்டு கொள்ளவில்லை. எனவே, போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X