அரசியல் செய்தி

தமிழ்நாடு

தவறான குற்றச்சாட்டு காங்., ராமசாமி விளக்கம்

Added : செப் 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:''நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசை எதிர்க்காமல், காங்கிரஸ் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது,'' என, காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின், சட்டசபை காங்., தலைவர் ராமசாமி அளித்த பேட்டி:

'நீட்' தேர்வின் மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, ராதாபுரம் எம்.எல்.ஏ., இன்பதுரை பேசினார். அப்போது, நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை பற்றி பேசாமல், 'நீட் தேர்வுக்கு, தி.மு.க.வும், காங்கிரசும் தான் காரணம்' என, அபாண்டமாக குற்றம் சாட்டினார். இந்த சட்டத்தை பொறுத்தவரை, அந்தந்த மாநிலங்களின் விருப்பத்தில் அமல்படுத்தலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில், நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆஜரானதால், காங்கிஸ் கட்சி, நீட் தேர்வை ஆதரித்ததாக கூறுகிறார். சட்டசபைக்கு வெளியே இருப்பவர்களை குறிப்பிட்டு, சபையில் பேசக் கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறும் வகையில், காங்கிரஸ் மீது தவறாக குற்றம் சாட்டுகிறார்.

நீட் தேர்வை அமல்படுத்தும், மத்திய அரசை பற்றி பேச, இவர்களுக்கு திராணி இல்லை. மத்திய அரசு, எந்த நேரத்திலும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளது. அதனால், மத்திய அரசை பற்றி பேச மறுக்கின்றனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, சென்னை கடற்கரையில், நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்; முதல்வர் இ.பி.எஸ்., தயாரா?இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ
16-செப்-202006:18:28 IST Report Abuse
Muthuraman நீட் பற்றி பேச காங்கிரஸுக்கு சிறிதும் அருகதை இல்லை...அன்று நீட் கொண்டுவந்தவர்களும் இவர்கள் தான்...இப்போது நீட் எதிர்க்கும் கோஷ்டியும் இவர்கள் தான்...அப்போது நீட் ஒரு நல்ல திட்டம் என்று சொன்ன தி மு க இன்று அதை நல்லது இல்லை என்று நா கூசாமல் பொய் சொல்வதும் இன்று தான்..வருங்கால மாணவ சமுதாயத்தை நல்வாழ்வு வாழ விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பது இந்த காங்கிரஸும் தி மு க வும் தான்...மக்களாகிய நாம் தான் விழித்துக்கொள்ளவேண்டும்...நம் குழந்தைகளுக்கு என்ன நல்ல படிப்பு என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்...இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம்...
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
16-செப்-202003:08:42 IST Report Abuse
Baskar யாரும் அபாண்டமாக சொல்லவில்லை . 2010 இல் நடந்த உண்மைகளை தான் பேசினார்கள். தி.மு.ka.kaaran பதவிக்கு ஆசை பட்ட விளைவை தான் இன்று மாணவர்கள் அனுபவிக்கின்றனர். இனி உங்கள்கட்சி காங்கிரஸ் அல்ல . கைகலப்பு காங்கிரஸ் என்று கூப்பிட போகிறோம். intha நீட் தேர்வை vaithe தி.மு.ka ஒன்று உங்களை தலை மூழ்கும் இல்லை என்றால் குறைந்த சீட்டுகளை கொடுக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X