கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நோய்களால் கஷ்டப்படும் டாக்டர்களுக்கு கொரோனா பணி வழங்க தடை கோரி மனு

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை:பல்வேறு உடல் நல பிரச்னைகளால் கஷ்டப்படும் டாக்டர்களை, கொரோனா சிகிச்சை பிரிவில் பணியமர்த்த தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர், டாக்டர் ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், 2020 ஏப்ரலில், பொது சுகாதார துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், பல்வேறு உடல் நல பிரச்னைகள் உள்ள டாக்டர்களை, கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என, கூறப்பட்டது.

இதையடுத்து, சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்னை, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் டாக்டர்களை, கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன், ஒரு சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இந்த சுற்றறிக்கை பிறப்பித்தும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி, ராஜிவ்காந்தி, ஓமந்துாரார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், மாவட்டங்களில் இயங்கும் மருத்துவமனைகளிலும், 50 வயதுக்கு மேற்பட்ட டாக்டர்களை, கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.இதனால், வயதான, மூத்த டாக்டர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே, வைரஸ் பாதிப்புக்கு பல டாக்டர்கள் ஆளாகியுள்ளனர். மூத்த டாக்டர்களை, கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற கட்டாயப்படுத்துகின்றனர்.

அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்றும்படி, மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 21ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X