சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பறிக்க முயற்சி ஐ.பி.எஸ்., அதிகாரி புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 பணம் பறிக்க முயற்சி ஐ.பி.எஸ்., அதிகாரி புகார்

சென்னை:'சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், தன் பெயரில் போலி கணக்கு துவங்கி, பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஐ.பி.எஸ்., அதிகாரி சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தெற்கு மண்டல, சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனராக பணிபுரிபவர் தினகரன். இவரது அலுவலகத்தில், எழுத்தராக பணிபுரியும் மார்ட்டின் விக்டர் சாம், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலுவலகத்தின், சைபர் கிரைம் பிரிவில், நேற்று முன்தினம் அளித்த புகார்:

ஐ.பி.எஸ்., அதிகாரியான, சென்னை, தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் அலுவலகத்தில், முகாம் எழுத்தராக பணிபுரிகிறேன். பேஸ்புக்கில், கூடுதல் கமிஷனர் தினகரன் பெயரில், மர்ம நபர்கள் போலியாக கணக்கு துவங்கியுள்ளனர். அதன் வாயிலாக, மற்றவர்களுக்கு உதவி செய்ய, கூடுதல் கமிஷனர் பணம் கேட்பது போல, தினகரனின் நண்பர்கள் மற்றும் தெரிந்த நபர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார், வேப்பேரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக பதிவேடு ரசீது வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X