சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய தமிழகம் நிர்வாகி கொலை: 3 பேர் சரண்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை:புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, மூன்று பேர், சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, முதுகுடியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம், 52; புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட, முன்னாள் செயலர். அதேபகுதியில், ஜனவரியில் நடந்த, தங்கவேலு என்பவரின் கொலை வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், செப்., 12, காலை, தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச, ராஜலிங்கம் சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி கொன்றனர். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என, புதிய தமிழகம் கட்சியினர், ராஜலிங்கத்தின் உறவினர்கள், முதுகுடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, தங்கவேல் மகன்கள், முனியராஜ், 38; பாலசுப்பிரமணியன், 35; பாலமுருகன், 30, ஆகியோர், சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மூவரையும், சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X