பொது செய்தி

தமிழ்நாடு

'ஹலோ... கன்ட்ரோல் ரூம் நான், சாகப்போறேன்'

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:நேற்று முன்தினம், இரவு, 11:00 மணிக்கு, மாநகர கன்ட்ரோல் அறை, 'வாக்கி டாக்கி'யில் ஒரு தகவல். 'நான் ரொம்ப மன உளைச்சலுடன் இருக்கேன்; தற்கொலை செய்து கொள்ளப்போறேன்,'' என்பதுதான் அது.இப்படி சொன்னவர், திருப்பூர், வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ., வேலுசாமி, 57, என்பவர் தான். அதிர்ச்சியடைந்த கன்ட்ரோல் ரூம், எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார், வேலுசாமி வசிக்கும் போலீஸ் குடியிருப்புக்கு விரைந்தனர்.
வேலுசாமியை, அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வந்தனர்.போலீசார் கூறுகையில், 'தினமும், இரவு, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது, வழக்குப்பதிய, உயரதிகாரிகள் 'டார்ச்சர்' கொடுக்கின்றனர். 'ப்ரீத் அனலைசர்' போதிய அளவில் இல்லாததால், யூகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்வதில், பல பிரச்னை உள்ளது.
இந்த மன உளைச்சல் காரணமாகதான், எஸ்.எஸ்.ஐ., வேலுசாமி, கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, தற்கொலை முயற்சி செய்வதாக புலம்பியுள்ளார்,' என்றனர்.திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் கேட்டதற்கு, ''சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், மதுபோதையில் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, போனில் உளறியதாக தெரிவித்தனர்.விபத்து குறைக்க, தினசரி வாகன தணிக்கை செய்து, குடிபோதையில் வருவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. வழக்குப்பதிவு செய்ய, வேலுசாமியை, யாரும் கட்டாயப்படுத்தவில்லை; விசாரித்து வருகின்றேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X