திருப்பூர்:அபாயகர கட்டடம், மரங்களை அகற்ற, அரசு உத்தரவிட்டுள்ளது.அடுத்த மாதம், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அசம்பாவிதம் தவிர்க்க, பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடம், அபாயகர மரம் போன்றவற்றை, கண்டறிந்து அகற்ற, அரசு உத்தரவிட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'மழைநீரால் கட்டடங்கள் இடிந்து பொதுமக்களுக்கு, பலத்த காயம், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, அபாயகர கட்டடம், மரங்களை கண்டறியும் பணி, மாநிலம் முழுதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசுக்கட்டடங்கள், இந்நிலையில் இருந்தாலும், பொதுமக்கள், வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கலாம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE