பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை: தோட்டக்கலை துறை புதிய திட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, 2.5 ஏக்கருக்கு, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, தோட்டக்கலை துறை அறிமுகம் செய்துள்ளது.மாநில அரசின் வேளாண்துறை சார்பில், ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய பயிர் சாகுபடியை ஊக்குவித்து வருகிறது.
இதற்கு, பலவகை மானியம் வழங்கப்படுகிறது. தோட்டக்கலை துறை சார்பில், காய்கறி பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.மேலும், மத்திய, மாநில தோட்டக்கலை துறை திட்டம் மூலம், காய்கறி, செடி விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, 'கிட்' வழங்கப்படுகிறது. சின்ன வெங்காயம், தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகாய், பாகற்காய், பீர்க்கன், புடலங்காய் உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்ய, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் தோட்டக்கலை துறை, இந்தாண்டு அறிமுகம் செய்துள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது;விவசாயிகள், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்தால், மக்களின் தேவை பூர்த்தியாகும். காய்கறி சாகுபடிக்கு, 2.5 ஏக்கருக்கு, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.இத்திட்டத்துக்கென, மாவட்டத்துக்கு, 50 முதல், 80 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள், காய்கறி விதை அல்லது நாற்று வாங்கிய ரசீது, வி.ஏ.ஓ., அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார்கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி புத்தக நகல், தோட்டத்தின் புகைப்படம் ஆகியவற்றுடன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X