பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடை, சிறையில் தொற்றுப்பரவல்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 'டாஸ்மாக்' கடை, சிறையில் தொற்றுப்பரவல்

திருப்பூர்:திருப்பூரில், சிறைவாசி மற்றும் 'டாஸ்மாக்' கடை ஊழியருக்கு தொற்று உறுதியானது.திருப்பூர், குமரன்ரோடு தாலுகா அலுவலக வளாகம் பின்புறம், மாவட்ட சிறை வளாகம் உள்ளது. அங்கு அடைக்கப்பட்டிருந்த, 23 வயது சிறைவாசிக்கு, கொரோனா தொற்று உறுதியானது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மாநகராட்சி சுகாதார பிரிவினர், நேற்று, மாவட்ட சிறை வளாகத்தில், கிருமிநாசினி தெளித்தனர். அங்குள்ள பிற சிறைவாசிகள் மற்றும் பணியில் இருந்த சிறைத்துறை ஊழியர்கள், 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிய பரிசோதனை நடத்தி, மாதிரி சேகரிக்கப்பட்டது.விசாரணை கைதிக்கு தொற்றுபல்லடத்தில் கடந்த, 2017ல் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இருவரை, பல்லடம் அருகே கல்லம்பாளையத்தில், போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கஸ்டடியில் உள்ள அவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது; இவ்வழக்கு விசாரணைக்காக சென்ற போலீசார் ஒருவருக்கும் நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து, விசாரணையில் தொடர்புடைய போலீசார் உட்பட, ஸ்டேஷனில் பணிபுரியும் அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பூர், தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை வளாகம் அருகே, 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது. இங்கு பணியாற்றும், 43 வயது விற்பனையாளர் ஒருவர், கடந்த வாரம், சொந்த ஊரான புதுக்கோட்டை சென்று வந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், மருத்துவ பரிசோதனை செய்த போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் மதுக்கடை மற்றும் சுற்றுப்பகுதியில் கிருமிநாசினி தெளித்தனர். உடன் பணியாற்றிய ஊழியர் மூவருக்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நோய் தொற்று கண்டறிய, மாதிரி சேகரிக்கப்பட்டது. இருநாட்கள், மதுக்கடையை மூட அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X