பொது செய்தி

தமிழ்நாடு

33 ஆண்டுகள் பணிபுரிந்தும் பணப்பலன் கிடைக்கவில்லை

Added : செப் 15, 2020
Share
Advertisement

அன்னூர்:அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், அன்னூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு போக்குவரத்துகழகத்தில், பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, 2015 முதல், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அன்னூர் அரசு போக்குவரத்து கழக கிளை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுப்பிரமணி, விஜயகுமார், குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.2019 ஏப்ரலுக்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு, இதுவரை ஒரு ரூபாய் கூட பணப்பலன் வழங்கப்படவில்லை என, ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X