சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளில் பணம் கொடுக்காமல் 'சரக்கு!'

Added : செப் 15, 2020
Share
Advertisement

கோவை;டாஸ்மாக் மதுக்கடைகளில் பணமில்லா பரிவர்த்தனைக்கான செயல்பாடுகள், பரிசோதனை அடிப்படையில் நடந்து வருகிறது.மதுக்கடைகளில் சில்லறை பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.இதுகுறித்து, முதுநிலை கோவை மண்டல மேலாளர் சாதனைகுரல் கூறுகையில், ''தலைமை அலுவலகம் மூலம் தனியார் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, பணமில்லா பரிவர்த்தனை செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மால், எலைட் டாஸ்மாக் மதுக்கடைகளில் இப்பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டுள்ளது. உரிய வழிகாட்டுதல்கள் கிடைத்த பின், பிற கடைகளிலும் இம்முறை நடைமுறைப்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X