சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்வி அலுவலகம் மூடல்

Added : செப் 15, 2020
Share
Advertisement

பல்லடம் -- பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையத்தில், அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில், வட்டார தொடக்க கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அருகேயுள்ள குடியிருப்பில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அப்பகுதி 'சீல்' வைக்கப்பட்டது. தொற்று அபாயம் கருதி, அங்குள்ள துவக்க, தொடக்க கல்வி அலுவலகம் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டன. 'மறு அறிவிப்பு வரும் வரை, பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட யாரும், அலுவலகத்திற்கு வர வேண்டாம்' என, தொடக்க கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.தொழிலாளர் ஆர்ப்பாட்டம்ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சார்பில், திருப்பூர் காங்கயம் ரோடு, சி.டி.சி., டிப்போ முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. '59 மாதமாக உயர்த்தப்படாத பஞ்சப்படியை உயர்த்த வேண்டும்.அரியர், நிலுவை தொகை தாமதமில்லாமல் வழங்க வேண்டும்; 2019 ஏப்ரலில் ஓய்வு பெற்றோருக்கு பென்ஷன், மருத்துவ காப்பீடு உடனே அமல்படுத்த வேண்டும், பென்சன் சீராய்வு குழு முடிவை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. கோவை மண்டல தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் பேசினார். ஓய்வு பெற்ற தொழிலாளர் பலர் பங்கேற்றனர்.வங்கி கிளை மூடல்திருப்பூர் - பி.என்., ரோட்டில், கர்நாடகா வங்கி கிளை உள்ளது. அதிகாரிகள், அலுவலர்கள் மொத்தம் 13 பேர் பணிபுரிகின்றனர். இவ்வங்கியில், 35 வயது ஆண் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வங்கிக்கிளை மூடப்பட்டது. மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. பிற பணியாளர்களும், தொற்று பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். 'வாடிக்கையாளர்கள், அருகில் உள்ள வேறு கிளையை அணுகி, வங்கி சேவை பெறலாம்' என, வங்கியினர் தெரிவித்தனர்.சாராய ஊறல் பறிமுதல்பல்லடம் அடுத்த கே. அய்யம்பாளையத்தில், சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனடிப்படையில், போலீசார், அதே பகுதியை சேர்ந்த செல்வம் 63, என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். தனது வீட்டின் குளியலறையில், சாராய பாட்டில், மற்றும் 10 லி., ஊறல் பதுக்கி வைத்திருப்பது, தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்கப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.ஆறு போலீசாருக்கு தொற்றுதிருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ., போலீஸ் ஏட்டு உட்பட இதுவரை, ஆறு போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒரே ஸ்டேஷனை சேர்ந்த, ஆறு போலீசார் பாதிக்கப்பட்டதால், போலீசார் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷனில், முறையாக கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப்பணியை மாநகராட்சியினர் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.ஒரே நாளில், 171 பேர் 'டிஸ்சார்ஜ்'திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், தினமும், கொரோனா சிகிச்சைக்காக, நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் மாத்திரை வழங்கப்படுவதால், பலரும் குறுகிய நாட்களில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.அவ்வகையில், நேற்று, ஒரே நாளில், மருத்துவமனையில் இருந்து, 71 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது, கொரோனா சிகிச்சைக்காக, மருத்துவமனையில், 122; வித்யாகார்த்திக் அரங்கில், 45; தனிமைப்படுத்த வார்டில், 20 பேர் என, 187 பேர் உள்ளனர்.மீண்டும் குழாய் உடைப்புவெள்ளகோவில், நகராட்சிக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, இச்சிபாளையம் நீரேற்று நிலையம் மூலம் தினசரி, 50 லட்சம் லிட்டர் தண்ணீர், 4 மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு, குழாய் மூலம் வினியோகிக்கப்படுகிறது.கோவை ரோட்டில் உள்ள ராட்சத குழாய் மீண்டும், மீண்டும் உடைபடுகிறது. கடந்த 10 நாட்களாக வெள்ளகோவில் நகரின் சில பகுதிகளில் நீர் வினியோகம் சீராக இல்லை. எனவே, குழாய் உடைப்பு அடிக்கடி நேரிடாத வகையில், சம்மந்தப்பட்ட துறையினர் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X