பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வாக்காளர் சேர்க்கை தீவிரம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:பதினெட்டு வயது நிறைவடைய உள்ளவர்களை, புதிய வாக்காளராக சேர்க்க, தீவிரம் காட்டப்படுகிறது.தமிழகத்தில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் சரிபார்ப்பு குறித்து, மாநிலம் முழுக்க, அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் குறித்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், வீடு வீடாக சென்று, இப்படிவம் தேவைப்படுவோருக்கு வழங்குவர்.அடுத்தாண்டு, ஜன., முதல் தேதிக்குள், 18 வயது நிறைவடைய உள்ளவர்களை, புதிய வாக்காளராக சேர்க்க தீவிரம் காட்டப்படுகிறது. வாக்காளர் பெயர் சேர்த்தல் படிவத்தை பூர்த்தி செய்து, தங்கள் பிறந்த தேதிக்கான ஏதாவது ஓர் ஆவணம் மற்றும் பிறப்பிடச்சான்றுடன் வழங்க வேண்டும்.நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்றவற்றுக்கு தேவையான படிவங்களை நிறைவு செய்து, உரிய ஆவணங்களை இணைத்து வழங்கவேண்டும். நிறைவு செய்யப்பட்ட படிவம், வரும் அக்., 31 வரை பெறப்படுகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், ஆய்வு செய்து, தேவைப்படும் வசதிகள் குறித்து, அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X