பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை பிறந்தநாள் விழா

Added : செப் 15, 2020
Share
Advertisement
 அண்ணாதுரை பிறந்தநாள் விழா

திருப்பூர்:திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.திருப்பூர், வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 31வது வார்டு கொங்குநகரில், திலக்ராஜ் தலைமை வகித்தார். மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். கட்சி கொடியேற்றப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், தாராபுரம் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.l திருப்பூர், அ.ம.மு.க., சார்பில் சி.டி.சி. கார்னர் பகுதியில், நிகழ்ச்சி நடந்தது. கட்சியினர், போக்குவரத்தை நிறுத்தி, இனிப்பு வழங்கினர். பலரும், முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி பங்கேற்றனர்.l மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாநகராட்சி அலுவலகம் அருகே, அண்ணாதுரை படத்துக்கு, மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.l அவிநாசி பேரூர் கழக அ.தி.மு.க., சார்பில், தாலுகா அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் மூர்த்தி, இளைஞரணி செயலாளர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி ஆனந்தன், கிளை செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X