'மின்சார மீட்டரை காணோம்' : நுகர்வோர் புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

அவிநாசி:'மின்சார மீட்டரை காணவில்லை' என, சினிமா நகைச்சுவை காட்சி பாணியில், போலீசாரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.திருப்பூர் அடுத்த, அவிநாசி அய்யம்பாளையம் திருக்குமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். தனது வீட்டில் பொருத்தப்பட்ட மின்சார மீட்டரை காணவில்லை; கண்டுபிடித்து தருமாறு, 'ஆன்-லைன்' வழியாக புகார் அளித்திருக்கிறார்.லோகநாதன் கூறியதாவது;மின் இணைப்பு வேண்டி, 'ஆன்லைன்' மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தேன். கடந்த, 7ம் தேதி, எனது இ-மெயில் முகவரிக்கு, மின்சார மீட்டர் பொருத்தி இணைப்பு வழங்கப்பட்டதாக, மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றது.ஆனால், எனது வீட்டில், மின் கம்பியோ, மின் மீட்டரோ இல்லை. மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் உரிய விளக்கம் தரவில்லை. எனவே, தான், மின்சார மீட்டரை கண்டுபிடித்து தருமாறு, ஆன் லைன் மூலம், போலீசுக்கு புகார் செய்தேன்.இவ்வாறு, அவர் கூறினார்.அவிநாசி மின்வாரிய கோட்ட பொறியாளர் விஜயஈஸ்வரனிடம் கேட்டபோது, ''இதுபோன்ற புகாரை, நேரடியாக எங்களிடம் தெரிவித்தாலே, உடனடியாக நிவர்த்தி செய்வோம்; ஒரு வேளை கம்ப்யூட்டர் பதிவேற்றத்தின் போது தவறு நிகழ்ந்திருக்கலாம். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X