பொது செய்தி

தமிழ்நாடு

இடம் தேர்வில் சர்ச்சை நீங்கியது

Added : செப் 15, 2020
Share
Advertisement
 இடம் தேர்வில் சர்ச்சை நீங்கியது

திருப்பூர்:ஈஸ்வரன் கோவில் வீதியில், வடிகால் கட்டும் இடம் தொடர்பான பிரச்னை, முடிவுக்கு வந்தது.திருப்பூர் மாநகராட்சி சார்பில், ஈஸ்வரன் கோவில் வீதியில், பூ மார்க்கெட் முதல், ஈஸ்வரன் கோவில் வரை வடிகால் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. பூ மார்க்கெட் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில், விநாயகர் கோவில், சில கடைகள் உள்ளன. இந்த இடத்தில், வடிகால் அமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். கோவில் நுழைவு பகுதியில், இடிப்பு பணி மேற்கொள்ள முற்பட்டனர்.இதற்கு, இந்து சமய அறநிலையத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை, மாநகராட்சி, வருவாய் துறை மற்றும் இந்துசமய அறநிலைய துறையினர் முன்னிலையில், நில அளவை பணி நடந்தது.இதில், மாநகராட்சிக்கு சொந்தமான, 2.5 அடி நிலத்தில், கோவில் முன்புற படிக்கட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, வடிகால் கட்டும் பணிக்கு, அதை இடித்து அகற்ற அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, பணி துவங்கியது; சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X