சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்சி ஒன்று; அணி இரண்டு? உட்கட்சி பூசல் அம்பலம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடம் வட்டார அ.தி.மு.க., இரு அணியாக பிரிந்து செயல்படுவது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவில் வெளிச்சத்துக்கு வந்தது.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் நிகழ்ச்சி, பல்லடத்தில் நேற்று நடந்தது. பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு, கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக, நகர கழக துணை செயலாளர் ராமமூர்த்தி தலைமையில், கட்சியினர் மாலை அணிவிக்க காத்திருந்தனர்.இதற்கிடையில், ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையிலான கட்சியினர் அங்கு வர, ராமமூர்த்தி அணியினர் அவர்களுடன் சேராமல் தனித்திருந்தனர். அவர்கள் மாலை அணிவித்து சென்றபின், இவர்கள் தொடர்ந்தனர்.கட்சியினர் கூறுகையில், 'இதுபோன்ற கட்சி நிகழ்வில், எம்.எல்.ஏ., தலைமையில் கட்சியினர் இணைந்து, பங்கேற்பது வழக்கம். எம்.எல்.ஏ., சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க சென்றதால், ஒன்றிய செயலாளர் தலைமையில், அண்ணா பிறந்தநாள் நடத்தப்பட்டது.இதில், கட்சியினருக்குள் கருத்தொற்றுமை இல்லை. தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்குள் உள்ள கோஷ்டி பூசலை சரிசெய்ய, தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X