பொது செய்தி

தமிழ்நாடு

25 ஆயிரம் மனு தேக்கம்; பட்டா மாறுதலுக்கு காத்திருப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:மாவட்டத்தில், நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பத்தின் மீது, ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க, டி.ஆர்.ஓ., உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில், பட்டா நிலங்களில், உட்பிரிவு செய்து, பெயர் மாற்றம் செய்யும் பணி மந்த கதியில் நடக்கிறது. கொரோனா பணிப்பளு, பிற நிர்வாக காரணத்தால், பட்டா மாறுதல் மனு, தேங்கியிருப்பதாக கூறப்படுகிறது.மாநில அளவில், பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களில், அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களின் வரிசையில், திருப்பூர், ஒன்பதாம் இடம் பெற்றுள்ளது.நிலுவை விண்ணப்பம் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க, வருவாய் நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்ட அளவில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான, பட்டா பெயர் மாறுதல் விண்ணப்பம் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தியிடம் கேட்டபோது, ''உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதலில், 9,228 விண்ணப்பம் நிலுவையில் இருந்தது; அவற்றில், 4,600 விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான மனு, நிலுவையில் உள்ளன.தாலுகா வாரியாக, ஒவ்வொரு சர்வேயர் வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வாராந்திர ஆய்வு நடத்தி, நிலுவை பணியை விரைந்து முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X