பொது செய்தி

தமிழ்நாடு

'சுற்றுச்சூழல்' ஆன்-லைன் போட்டி: பதிவு செய்ய இன்றே கடைசி

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்;பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆன்-லைன் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், 'இயற்கைக்கான உலகளாவிய நிதியம்' என்ற தொண்டு நிறுவனம், 'ஓர் உலகம், ஒரு வீடு' என்ற தலைப்பின் கீழ், சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் மூலம் இணையவழி பயிற்சியை அறிவியல் ஆசிரியர்களுக்கு நடத்தியது.ஓசோன் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் பயிலும், 3ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் போட்டியை அறிவித்துள்ளது. இணையவசதி உள்ள மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இதற்கான முன்பதிவுக்கு இன்றே கடைசி நாள்.மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் திட்ட ஒருங்கிணைப்பாளரை, 94438 04345 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X