நகரெங்கும் நாய்கள் நாட்டாமை; இது யார் இயலாமை?

Added : செப் 15, 2020
Share
Advertisement

குவியுது குப்பை வார்டு 29, சரவணம்பட்டி, ஸ்கூல் ரோடு வேலவன் நகரில், சுகாதாரப் பணியாளர்கள் முறையாக குப்பை எடுப்பதில்லை.- ரமேஷ், வேலவன் நகர்.

ரோட்டுல தட்டுது மூடிகோவில்மேடு முதல் ஜி.சி.டி., வரை ரோட்டின் நடுவில் பாதாள சாக்கடை மூடிகள் மேடாக உயர்ந்து இருக்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.- ராஜ்குமார், மத்திபாளையம்.

நாய்களின் நாட்டாமைவடவள்ளி, வேம்பு அவென்யூ மற்றும் சிறுவாணி ரோட்டில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் போவோர் வருவோரை துரத்தி கடிக்கின்றன.- -சூரி, வடவள்ளி

கொசுவுக்கு பங்காளி ஈக்கள்ஆவாரம்பாளையம், ஸ்ரீ வள்ளி நகர் அருகில் குப்பை கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதே இல்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.-அனுகுமாரி, ஆவாரம்பாளையம்.

இருள் உமிழும் விளக்கு!துடியலுார், வி.கே.எல்.நகர், 5வது வீதியில் உள்ள மின் கம்பத்தில் ஒன்றரை மாதங்களாக விளக்கு எரியாததால், அப்பகுதியே இரவில் கும்மிருட்டாக உள்ளது.- ஜெயக்குமார், துடியலுார்.

ரோடெல்லாம் ஓடுது தண்ணீர்வார்டு 3, ஜி.என்.மில்ஸ்.பகுதி, சுப்ரமணியம்பாளையத்தில், அரசு பள்ளி அருகில் உள்ள தண்ணீர் தொட்டியை முறையாக பராமரிப்பதில்லை. இதனால், தண்ணீர் சாலையில் கசிந்தோடி, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.- கணேசமூர்த்தி, சுப்ரமணியம்பாளையம்.

பேஸ்மட்டம் ரொம்ப வீக்குசவுரிபாளையம், வ.உ.சி. வீதியில், கம்பம் எண் 3 என்ற மின் கம்பம், அடிப்பகுதி மிகவும் சேதாரமாகி உள்ளது. சாக்கடையில் ஊன்றப்பட்டுள்ள இக்கம்பத்தை, பொருத்தமான இடத்தில் மாற்றி, தரமான மின் கம்பம் நடவேண்டும்.- கதிர், சவுரிபாளையம்.

குட்டி குட்டி குட்டைகள்பன்னிமடை முதல் திப்பனுார் வரை செல்லும் ரோடு, முழுக்க சேதாரமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் கூட, சிரமப்பட்டே செல்கின்றன.- சுரேஷ்குமார், பன்னிமடை.

படித்துறையில் ரூ.10 வசூல்பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட ரதவீதி, ஆற்று ரோடு, சொர்க்கவாசல் வீதி, சின்னக்கோவில் வீதி மற்றும் வேடபட்டி சாலை ஓரங்களில், நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், படித்துறையில் டூ வீலருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.- ஈஸ்வரன், பேரூர்.

தெருவெல்லாம் நாறுது சார்67-வது வார்டு, ராமநாதபுரம், ரகுமான் சேட் காலனியில், கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவு நீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் தேங்கி நிற்கிறது.-அமல்ராஜ், ராமநாதபுரம்.

தெருநாய் தொல்லை தீரவில்லைசேரன்மாநகர் அருகில், மகாலட்சுமி கார்டன், பேஸ்- 3 வி.கே.ரோடு பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. அவ்வழியே வரும் வாகனங்களை வழிமறித்து துரத்துகின்றன.- லலிதா, சேரன்மாநகர்.

பாதியில நிக்குது சாக்கடைநெம்பர் 4, வீரபாண்டி பிரிவில், நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கத்திற்காக கட்டும் சாக்கடையை, பாதியில் நிறுத்தியுள்ளனர். ஒரு மாதமாக, அப்படியே பணி முடிக்காமல் நிறுத்தியதால், துர்நாற்றத்தால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.- மகேஷ்பாபு, வீரபாண்டி.

சர்க்கஸ் வீரர்கள் போகலாம்தெலுங்குபாளையம் ஸ்ரீ துர்கா நகரில் மழைநீர், சேறு மற்றும் சகதியாக, பாதையில் நடக்க கூட வழி இல்லாமல் அப்படியே உள்ளது. மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.- பிரேம் நிவாஸ், தெலுங்குபாளையம்.

அறிவிக்கப்படாத குப்பை கிடங்குவடவள்ளி, சி.எஸ். நகர், 2வது குறுக்குத்தெருவில் உள்ளது, முத்தம்மாள் அவென்யூவின் ரிசர்வ் சைட். ஆனால், தெருவின் முகப்பிலேயே குப்பை, பாலித்தீன் மற்றும் மாமிசக் கழிவு கொட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.- சந்துரு, வடவள்ளி.

குழியிலே இது புதுசுமேட்டுப்பாளையம் ரோட்டில், துடியலூர் டிரெண்ட்ஸ் ஷோரூம் எதிரில் ஏற்பட்டுள்ள சேதத்தினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.-ரமேஷ், அப்பநாயக்கன்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X