சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'நோய்க்கு பாகுபாடு கிடையாது!'

Added : செப் 15, 2020
Share
Advertisement
 பக்க வாத்தியம்

'நோய்க்கு பாகுபாடு கிடையாது!'

நீலகிரி மாவட்டம், குன்னுார் ரயில்வே கூட்டுறவு ரேஷன் கடை வளாகத்தில், மாநில அரசின் இலவச முககவசம் வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது.கலெக்டர், இன்னசென்ட் திவ்யா பேசுகையில், 'நீலகிரியில், நகர பகுதியை விட, கிராமங்களில் நடக்கும் திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளில், மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால், 'கொரோனா' தொற்று அதிகமாகியுள்ளது' என்றார். அதே நேரத்தில், அந்த விழா நடந்த இடத்தில், சமூக இடைவெளி இல்லாமல் அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் இருந்தனர்.
அங்கிருந்த நிருபர் ஒருவர், 'கிராம மக்களுக்கு மட்டும் தான், நோய் பரவுமா? அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் நோய் பரவாதா... நோய்க்கு ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், அரசியல்வாதி எந்த பாகுபாடும் கிடையாது' என்றார். அங்கிருந்த, ஆளுங்கட்சி பிரமுகர், 'சூப்பரா பேசுறீங்க... அரசியலுக்கு வாரீங்களா...' என்றதும், நிருபர் சிரித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X