சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

ராசியில்லாத ராஜா!

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement


அக்கம் பக்கம்

ராசியில்லாத ராஜா!

'அரசியலில் பழுத்த அனுபவம் உடைய என்னை, தகாத வார்த்தைகளை கூறி அவமதிக்கின்றனரே' என, கண்ணீர் வடிக்கிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன்ராம் மஞ்சி. இவர், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தவர். கட்சியில் நிதிஷ் குமாருக்கு பிரச்னை ஏற்பட்டபோது, மஞ்சியை முதல்வராக நியமித்தார். மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராக முயன்றபோது, மஞ்சி, பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார். அவருக்கு, பா.ஜ., ஆதரவு அளித்தாலும், முதல்வராக நீடிக்க முடியவில்லை.
இதற்கு பின், காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் அங்கம் வகித்தார் மஞ்சி. லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. விரைவில், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள மஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
'தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, எதிர்க்கட்சி கூட்டணி கலகலத்து விட்டது' என, ஆளும் கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியினரோ, 'மஞ்சி, எந்த கூட்டணிக்கு சென்றாலும், அது உருப்படாது. அவர் ஒரு ராசியில்லாத ராஜா' என, பதிலுக்கு போட்டு தாக்குகின்றனர். மஞ்சியோ, 'என் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டுவதற்காக இப்படி விமர்சிக்கின்றனர். இவர்களுக்கு மனசாட்சி இல்லையா' என, கதறுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-செப்-202006:12:46 IST Report Abuse
D.Ambujavalli ஒருத்தர் சேர்ந்தோ, ஒருத்தர் விலகியோதான் ஒரு கட்சி ஜெயிக்க வேண்டுமென்றால், பாவம் ,எவ்வளவு பலவீனமான கட்சி அது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X