பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு பறக்குது 'காமன்'

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கேரளாவுக்கு பறக்குது 'காமன்'

மேட்டுப்பாளையம்;தமிழகத்தில் மழை வலுக்க துவங்கியுள்ளதால், ஏற்காடு, கொல்லிமலை ஆகிய மலைகளில் இருந்து, ஒரு மாதம் முன்பாகவே, பட்டாம்பூச்சிகள் கேரளாவுக்கு செல்லத் தொடங்கியுள்ளன.மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக, கேரளாவை நோக்கி, லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள், கடந்த ஒரு வாரமாக பறந்து செல்கின்றன.
இது குறித்து, தமிழ்நாடு பட்டாம்பூச்சி சொசைட்டி உறுப்பினர் ஜெஸ்வின் கிங்ஸ்லி கூறியதாவது:பட்டாம்பூச்சியில் டாட் புளூ டைகர், புளூ டைகர், காமன் குரோ என, மூன்று வகைகள் உள்ளன. வழக்கமாக, ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில், கேரளாவில் மழை பெய்யும்.அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக, கிழக்கிலுள்ள ஏற்காடு, கொல்லிமலை ஆகிய மலைப்பகுதிகளுக்கு, பட்டாம்பூச்சிகள் பறந்து செல்லும்.அதேபோன்று தமிழகத்தில் பருவ மழை பெய்யும் போது, அக்., நவ., மாதங்களில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக, கேரளாவுக்கு செல்லும்.பகல் முழுவதும் பறந்து செல்லும் பட்டாம்பூச்சிகள், இரவில் மரங்களிலும் நீர்நிலைகள் உள்ள, நிலப் பகுதியிலும் தங்கியிருக்கும். நீர்நிலை நிலப்பகுதியில் தாது உப்புகள் அதிகம் இருக்கும்.
அந்த நிலப்பகுதியில், பட்டாம்பூச்சிகள் அமர்ந்து, மண்ணிலுள்ள தாதுக்களை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். பின்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்குச் சென்று, அங்கு இனப்பெருக்கம் செய்து, முட்டையிட்ட பின், தாய் பட்டாம்பூச்சி அழிந்துவிடும்.முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள், அடுத்த சீசனுக்கு, கேரளத்திலிருந்து தமிழகத்தில் உள்ள மலைகளை நோக்கி பறந்து வரும். இந்த ஆண்டு, தமிழகத்தில் மழை முன்னதாகவே பெய்வதால், பட்டாம்பூச்சிகளும் ஒரு மாதம் முன்பாகவே பறந்து செல்கின்றன. 10 ஆண்டுகளுக்குப் பின், இப்போதுதான் இது போல் பட்டாம்பூச்சிகள் அதிகமாக பறந்து செல்கின்றன.கல்லாறு பகுதி, பட்டாம்பூச்சிகளின் வழித்தடம் என்பதால், ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளில், காமன் குரோ என்ற பட்டாம்பூச்சிகள், அதிகமாக பறந்து செல்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த ஆண்டு, தமிழகத்தில் மழை முன்னதாகவே பெய்வதால், பட்டாம்பூச்சிகளும் ஒரு மாதம் முன்பாகவே பறந்து செல்கின்றன. 10 ஆண்டுகளுக்குப் பின், இப்போதுதான் இது போல் பட்டாம்பூச்சிகள் அதிகமாக பறந்து செல்கின்றன.நிலப்பகுதியில், பட்டாம்பூச்சிகள் அமர்ந்து, மண்ணிலுள்ள தாதுக்களை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். பின்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குச் சென்று, அங்கு இனப்பெருக்கம் செய்து, முட்டையிட்ட பின், தாய் பட்டாம்பூச்சி அழிந்துவிடும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Domban -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202022:58:10 IST Report Abuse
Domban improper cut and paste, article is getting repeated at the end, adikira copiya olunga adingappa!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X