சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஆயுள் சிறை என்றால் என்ன?

Added : செப் 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஆயுள் சிறை என்றால் என்ன?

டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த ஆண்டு மார்ச்சில், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள, இரு மசூதிகளில், பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த, நான்கு பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணை நடத்தி வந்த, வெலிங்டன் நீதிமன்ற நீதிபதி கேமரூன் மாண்டர், முக்கிய குற்றவாளியான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, பிரென்ட்டன் டாரன்டுக்கு, 'பரோல்' இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளார். அவனுக்கு, 29 வயது!
பரோல் இல்லாத ஆயுள் தண்டனை என்றால், சாகும் வரை சிறையில் தான், அவன் இருக்க வேண்டும்.கடந்த, 1991ல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், முன்னாள் பிரதமர் ராஜிவ் உட்பட, 16 பேரை, ஈவு இரக்கமில்லாமல், மனித வெடிகுண்டு மூலம், இதயமே துடிதுடிக்க, விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர்.தமிழர்கள் எதிர்பார்த்தது போல், இந்த, ஏழு கொலைகாரர்களுக்கும், முதலில் துாக்கு தண்டனை தான் விதிக்கப்பட்டது.நம் தமிழக அரசியல்வாதிகளால், 16 பேரை கொன்ற கொலையாளிகளுக்கு சலுகை காட்டப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.அன்றே அவர்களுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றியிருந்தால், அதை முன்னிறுத்தி இன்று வரை நடக்கும்
அரசியலுக்கு, முடிவு கிடைத்திருக்கும்.ஆனால் இன்று, 'என் மகனுக்கு, 'பரோல்' வேண்டும்; லண்டனில் இருக்கும், என் மகளுக்கு, 'வீடியோ கால்' பேசணும்' நாள் ஒரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, ஓயாமல் மனு போடப்படுகிறது; அது, விசாரிக்கப்படுகிறது. ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. ஓயாமல் வழக்காடுகின்றனர்.ஆயுள் தண்டனை என்றால் என்ன என்பதை, தமிழகத்திற்கு தெளிவாக புரியவைத்துள்ளார், நியூசிலாந்து நீதிபதி கேமரூன். 'பரோல் இல்லாத ஆயுள் தண்டனை என்றால், சாகும் வரை சிறையில் இருப்பது. ஜாமினில் வெளிவரவே முடியாது' என, தீர்ப்பில் கூறியுள்ளார்.நம் தமிழகத்தில் தான், 16 பேரை கொலை செய்தோரை, விடுதலை செய்ய வேண்டும் என, போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகள் உள்ளனர். அந்த, 16 நபர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் வருத்தப்படத் தான் ஆளில்லை!

அந்த நாட்கள் திரும்ப கிடைக்குமா?

சா.ஆ.மாரப்பன், சாமநாயக்கன் பாளையம், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இரு தலைமுறைக்கு முன், எங்கள் வாழ்க்கையில், சாப்பாட்டுக்கு வஞ்சனை இருக்காது. சாமை, சோளம், பாசிப்பயறு, தட்டைப் பயறு, நெல், துவரை என, மூட்டை மூட்டைகளாக, தானியங்கள் கொட்டிக் கிடக்கும்.ஒவ்வொரு வீட்டிலும், தானியங்கள் சேமித்து வைக்க, இரண்டு குதிர்கள் இருக்கும். கடைக்கு சென்று, பணம் கொடுத்து வாங்கும் பொருள், உப்பு மட்டும் தான்!சாமை அதிகம் விளைந்ததால் தான், எங்கள் ஊருக்கு, 'சாமநாயக்கன் பாளையம்' என, பெயர் வந்ததாக, ஊர் பெரியோர் கூறுவர்.அன்று எல்லாம், அதிகாலையில் எழுந்து, காபி, டீ குடிக்கும் பழக்கம் இல்லை. இரவு மீதமான சாதத்தில், தண்ணீரை ஊற்றி வைப்பர். அதிகாலையில், பசுவின் தயிர் சேர்த்து, அந்த நீரை குடிப்போம். கம்பு, ராகி, கேழ்வரகு, தினை, சாமை என, சரிவிகித உணவு, அன்று எங்களுக்கு கிடைத்தது. அதிகமாக, கீரை வகை தான், உணவில் பயன்படுத்துவோம்.
எல்லாருடைய வீட்டிலும், முருங்கை மரம் வளர்ப்பர். தேவைப்படும் போது, காய், கீரை பறித்து, குழம்பு செய்வோம். இது போன்ற, இயற்கை சார்ந்த சத்துணவால், நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, திடகாத்திரமாக இருந்தோம். மருத்துவமனைக்கு, சென்றது கிடையாது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. எங்கள் ஊரில் வாழும் குடும்பங்கள் இடையே, சகோதரத்துவ மனப்பான்மை குறைந்து விட்டது. அன்பு இல்லை; ஆறுதல் வார்த்தைகள் இல்லை; பிறரை மதிக்க வேண்டும் என்ற உயர் பண்பு இல்லை.ஊர் பெரியோரை, இன்றைய இளைய தலைமுறையினர் மதிப்பது இல்லை. தடி எடுத்தவன், தண்டல் வேலை பார்க்கிறான்.எதிலும் போட்டி, பொறாமை, தீய எண்ணங்கள் வளர்ந்து விட்டன. ரசாயனங்களை, உணவாக உட்கொள்கின்றனர். சாதாரண தலைவலிக்கே, மருத்துவமனைக்கு செல்கின்றனர்!
கலாசாரத்தில், பாரம்பரிய உணவு போன்றவற்றில் இருந்து, இன்றைய தலைமுறை நீண்ட துாரம் விலகி சென்றுவிட்டது. அவர்களால், மீண்டு வர முடியுமா என, தெரியவில்லை. 'இயற்கையோடு வாழ்ந்த அந்த நாட்கள், திரும்ப கிடைக்குமா?' என்ற ஏக்கம், நெஞ்சில் நிரம்பி வழிகிறது.
அரசியல்வாதிகளை நம்பாதீர்!

சிவ.தொல்காப்பியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மருத்துவப் படிப்புக்காக, 'நீட்' தேர்வில் வெற்றி பெறாது போனால், அதோடு வாழ்வு முடிந்து விடுமா?'தேர்வு நுழைவுச் சீட்டுக்கான, 'பாஸ்வேர்டு' மறந்து போச்சு' என, ஒரு பெண் தற்கொலை; 'மன உளைச்சல்' என்று, ஒரு மாணவன் தற்கொலை... இன்றைய தலைமுறை, மனவலிமை இன்றி வளர்ந்து வருகிறதா?நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெறுவோரும், உங்களைப் போன்ற மாணவர்கள் தானே!ஒரு முறை தோல்வி அடைந்தால் என்ன? மறுமுறை, கூடுதல் கவனத்தோடு படித்து, தேர்ச்சி பெறலாமே!அதில் வெற்றி கிட்டாவிட்டால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, எண்ணற்ற சிறப்பான பணிகள் உள்ளன; அதற்கு முயற்சிக்கலாம்.
அதை விடுத்து, தற்கொலை முடிவுக்கு போகலாமா? கிடைத்தற்கரிய மானிட பிறவியை, எதற்காகவும் இழக்கலாமா?இதுநாள் வரை, உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் உழைப்பு எல்லாம், வீணாக்கலாமா?உங்கள் தற்கொலையால், அதிகபட்சமாக, ஒரு வாரம் அதைப் பற்றி பேசுவர். அதன் பின், அடுத்த பரபரப்பான செய்திக்கு, மக்கள் மாறிவிடுவர். உங்களை பெற்று, வளர்த்த தாய், தந்தை மட்டும், உங்கள் நினைவோடு தினமும் துயரப்படுவர். அதைத் தான், நீங்கள் விரும்புகின்றீரா?
உங்களின் அளப்பறிய திறமை மீது, நம்பிக்கை வையுங்கள். அரசியல்வாதிகளை நம்பாதீர்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
16-செப்-202014:58:57 IST Report Abuse
Sathya Dhara இதெல்லாம் கட்டுமர அன்னான் சுடலை தம்பி இவர்கள் கற்றுத்தந்த பாடம், பகுத்தறிவு, பண்பாடு இவைதான். மாணவர்களுக்கும் போதவில்லை. பெற்றவர்களுக்கும் போதவில்லை. என்ன எது என்று புரியாத முற்றிலும் சிந்தனை இல்லாத ஒரு தலைமுறை. ஒரு பிளேட் பிரியாணிக்கும் ஒரு குவார்ட்டருக்கும் இரண்டு நாட்டுக்கும் வாக்குகளை விற்கும் சமுதாயம் இருக்கும் வரை எப்படி திருந்தும் தமிழகம். இதனை சீரியாசாக எடுத்துக்கொண்டு அனைத்து தலைவர்களும் மாணவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களும் ....நல்லவர்களும், ஏதாவது செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-செப்-202006:25:15 IST Report Abuse
D.Ambujavalli ஒரு தேர்வுக்கு செல்பவர், பாஸ்வேர்ட் ஐக்கூட நினைவு,வைத்துக்கொள்ள இயலாதவர் எப்படி பரீட்சையில் வினாக்களுக்கேற்ற விடைகளை நினைவு கொள்வார்? அதற்காகத் தற்கொலையா? நம்பிக்கைக்குரிய பெற்றோரிடம் அதனைப் பகிர்ந்திருக்கலாமே இது வேதனை கலந்த வேடிக்கை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X