பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 15, 2020
Share
Advertisement
  இதே நாளில் அன்று

செப்., 16, 1922

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில், வசதியான குடும்பத்தில், 1922 செப்., 16ம் தேதி பிறந்தவர், கி.ராஜநாராயணன். எழுத்துலகில், கி.ரா., என்றழைக்கப்பட்டார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றவர், விவசாயத்தில் ஈடுபட்டார். தன், 40 வயதுக்கு மேல் தான், எழுதத் துவங்கினார். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை, இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, நாவல், கடிதம் என, இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.இவரது கதைகள் தொகுக்கப்பட்டு, 944 பக்கங்கள் உடைய, 'நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்' என்ற படைப்பாக வெளியானது. இவரது, சில கதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக, 1991-ல், 'சாகித்ய அகாடமி' விருது பெற்றார். தமிழக அரசு விருது உட்பட, ஏராளமான விருதுகள், இவரை கவுரவித்துள்ளன.
'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எழுத்தாளர், கி.ராஜநாராயணன் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X