சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

திட்டமிட்டு படித்தேன் ஐ.எப்.எஸ்., ஆனேன்!

Added : செப் 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சொல்கிறார்கள்

திட்டமிட்டு படித்தேன் ஐ.எப்.எஸ்., ஆனேன்!

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து, தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா துரையின் கொள்ளு பேத்தி, ராணி பிருத்திகா: என் அம்மா பெயர் இளவரசி; அப்பா முத்துகுமார். அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் பரிமளத்தின் மகள் தான், என் அம்மா. அவரின் மகள் தான் நான். எனக்கு, ராணி என பெயர் வைத்தது, தி.மு.க., தலைவர், மறைந்த கருணாநிதி. எனக்கு, ஒரு தங்கை இருக்கிறார்; சென்னை, எத்திராஜ் கல்லுாரியில் படித்து வருகிறார்.நான் முதலில், மருத்துவம் படிக்கத் தான் ஆசைப்பட்டேன். ஆனால், அரசு ஒதுக்கீட்டில் கிடைக்கவில்லை. அதனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன்.
அப்போது முதல், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என இலக்கு நிர்ணயித்து படித்தேன். கல்லுாரியில் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் போதே, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக முழு அளவில் படிக்கத் துவங்கி விட்டேன். இதனால், வேலைக்கான, 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் கூட, கலந்து கொள்ளவில்லை.படித்து முடித்ததும், அகாடமியில் சேர்ந்து விட்டேன். முதல் தேர்விலேயே வெற்றி பெற்று விட வேண்டும் என முடிவு செய்து, கடினமாக படித்தேன். அதற்கு என் பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். தினமும், குறைந்தது, ஏழு - எட்டு மணி நேரம், தேர்வுக்காக மட்டும் படிப்பேன். சில நாட்களில், சிறு இடைவேளைகளுடன், 14 மணி நேரம் கூட படித்து உள்ளேன்.அன்றாடம் செய்தித் தாள்களை, முழுமையாக, ஆழ்ந்து படிப்பேன். அதனால், அன்றாட நிகழ்வுகள் எனக்கு அத்துபடி. படிக்கும் போது, நெருங்கிய தோழியருடன் கூட பேச மாட்டேன். எப்போதாவது தான், மன மாற்றத்திற்காக, ெவளியே செல்வேன்; கடினமாக படித்ததால், முதல் நிலை தேர்வு எழுதியதும், அந்த தேர்வில் வெற்றி பெற்று விடுவேன் என்பது தெரிந்து விட்டது.
'ரிசல்ட்' வரும் முன், முதன்மை தேர்வுக்காக, இன்னும் கடுமையாக படிக்கத் துவங்கி விட்டேன். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், யு டியூப்' போன்ற எந்த சமூக வலைதளம் பக்கமும் செல்லவில்லை. முழு மூச்சாக படித்து, முதன்மை தேர்விலும் வெற்றி பெற்று விட்டேன். அதன் பின், நேர்முகத் தேர்வுக்காக, இன்னும் கடினமாக என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.ஐ.பி.எஸ்., அதிகாரி சைலேந்திரபாபு நடத்திய, மாதிரி நேர்முகத் தேர்வு, எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில், 117வது இடத்தை பிடித்தேன். எனக்கு, இந்திய ெவளியுறவுத்துறையின் செயல்பாடுகள் மிகவும் பிடிக்கும். அதனால், அந்தத் துறையில் பணியாற்ற, ஐ.எப்.எஸ்., பணியை தேர்வு செய்துள்ளேன். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு, திட்டமிட்டு படித்தால், வெற்றி பெறுவது எளிது!

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
16-செப்-202021:04:18 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே இது குடும்பங்க.... வாரிசுங்க...
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
16-செப்-202019:37:03 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தியா? மிக்க சந்தோசம்.
Rate this:
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
16-செப்-202010:23:05 IST Report Abuse
mariyappangopinathan வாழ்த்துக்கள். அண்ணா ஆற்றிய பணியை மக்கள் வெகுவாக பாராட்டுவது போல தங்கள் பணியையும் மக்கள் பாராட்ட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X