கலிபோர்னியா : இன்று ஐபாட் ஏர்-ஐ மற்றும் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். உலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகிறது.
இதைபோல் இந்தாண்டிலும் ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலைகளை அறிமுகம் செய்துள்ளது.

இன்று வெளியாகியுள்ள புதிய தயாரிப்புகளில் முக்கியமாக புதிய வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் ஆப்பிள் எஸ்இ மாடலில் எஸ்5 பிராசஸரில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப் புதிய வாட்ச் மாடலில் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவுகளை கணக்கிட்டு கண்காணிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது சிலநொடிகளில் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவுகளை கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டுள்ளது. இது முந்தைய பிராசஸரை விட வேகமாக இருப்பதுடன் பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் முன்பைவிட மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தவிர ஐபோன் 12 தொடர் வெளியீடு தாமதமாகும் எனவும், இந்த முறை நவீன வசதிகளுடன் கூடிய ஐபாட் ஏர்-ஐ. அறிமுகப்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE