பொது செய்தி

தமிழ்நாடு

வெட்டப்படும் நிழல்தரும் மரம்: பசுமை ஆர்வலர் கவலை

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருப்பூர்:மாநகராட்சி பகுதியில், வடிகால் பணிக்காக, மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவது, பசுமை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரோடு, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஜெய்வாபாய் பள்ளி அருகே, நஞ்சப்பா பள்ளி செல்லும் ரோட்டின் கிழக்கில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பணிக்காக, அங்குள்ள சில மரங்களை வெட்ட, வருவாய் துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. அனுமதி பெற்றதற்கும், அதிகமான மரம் வெட்டப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அங்கு, 25 ஆண்டு பழமைவாய்ந்த, ரசமரம், நாவல், வேம்பு, மே பிளவர் என, 40 ஆண்டு பழமைவாய்ந்த அரசமரம் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. 'இயன்றவரை மரங்களை வெட்டாமல், பணிகளை செய்ய வேண்டும்' என, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாநகராட்சி இளநிலை பொறியாளர் சுரேஷிடம் கேட்ட போது, ''வருவாய் துறை அனுமதியில் தான், மரங்கள் வெட்டப்பட்டன. சில மரங்களில், கிளை மட்டும் அகற்றப்படும். நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மரத்தை வெட்டாமல், அந்த இடத்தில் பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.தாசில்தார் பாபுவிடம் கேட்டபோது, ''மாநகராட்சி நிர்வாகத்தினர், மரம் வெட்டி, சாக்கடை கால்வாய் கட்ட, ஆர்.டி.ஓ.,விடம் அனுமதி பெற்றுள்ளனர். மரம் வெட்டும் பணியை கண்காணித்து வருகிறோம்; வெட்டப்படும் மரத்துக்கு பதிலாக, புதிய மரக்கன்று நட்டு வளர்க்க அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X