பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை இழை ஆடை ஏற்றுமதி; நாளை நடக்கிறது கருத்தரங்கம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருப்பூர்:செயற்கை இழையில் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி வாய்ப்பு குறித்த ஆன்லைன் கருத்தரங்கம், நாளை நடைபெற உள்ளது.மதிப்பு கூட்டு ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, செயற்கை இழை ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கம், நாளை (17ம் தேதி) மதியம், 12:15 முதல், 2:00 மணி வரை நடைபெற உள்ளது.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், பிர்லா நிறு வன பிரதிநிதி மன்மோகன் சிங், சிந்தடிக் ரயான் அண்டு டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட்ஸ் புரமோசன் கவுன்சில் தலைவர் ரோனக் ருஹானி, ட்ரைபெர்க் நிறுவன பிரதிநிதி சஞ்சய் சுக்லா, சி.எம்.டி., ஆக்ரோமா நிறுவன பிரதிநிதி பிரசாத் பங்கேற்று, செயற்கை இழை ஆடை தயாரிப்பு நுட்பம், ஏற்றுமதி வாய்ப்பு குறித்து விளக்க உள்ளனர்.கருத்தரங்கில் பங்கேற்கவுள்ள, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினர், https://event.webinarjam.com/register/32/xq2z6bmq என்கிற தளத்தில் வருகையை பதிவு செய்யவேண்டும்' என, ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X