தருவீங்களா; மாட்டீங்களா? முக கவச அறிவிப்பில் குழப்பம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

பல்லடம்:அரசு அறிவித்த, இலவச முக கவசம் வழங்கும் திட்டம், அறிவிப்போடு நின்றுபோனதா என, பல்லடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பல்லடம் வட்டாரத்தில் உள்ள, 80 முழு நேர, 54 பகுதி நேர ரேஷன் கடைகளில், 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரசு அறிவித்த இலவச முக கவசம், கிடைக்கவில்லை என, சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'கொரோனா நோய் தொற்று அபாயம் கருதி, மாநில அரசு அறிவித்த இலவச முக கவசம் வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது. நோய் தொற்று அதிகரித்து வரும் இச்சூழலில், திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி இருக்க வேண்டும்.பல்லடம் வட்டாரத்துக்குட்பட்ட பல பகுதிகளில், முக கவசம் வழங்கப்படவில்லை; சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பல்லடம் வட்டார ரேஷன் கடைகளுக்கு வழங்க, 1.15 லட்சம் முக கவசம் தயாராக உள்ளது. நாளை (இன்று) முதல், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X