அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொது மக்கள் மனுக்களுக்கு தீர்வு காண தனி மையம்: இ.பி.எஸ்., அறிவிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:''பல்வேறு அரசு துறைகள் தொடர்பான குறைகளை, பொது மக்கள், ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்ய வசதியாக, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைக்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:தற்போது, வெவ்வேறு அரசு துறைகள், தங்களுக்கென தனித்தனி குறை தீர்ப்பு மையம் மற்றும் இணையதளங்களை உருவாக்கி, செயல்பட்டு வருகின்றன. உதவி மையம்மாவட்ட அளவில், திங்கள் கிழமை தோறும், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனு நீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள், 'அம்மா' திட்டம் குறை தீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் போன்றவை நடத்தப்படுகின்றன.

மாநில அளவில், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும், 'அம்மா' அழைப்பு மையம் போன்ற அமைப்பு களிலும், மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகள் காணப்படுகின்றன.இதனால், ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்கள் அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படுவதை காண முடிகிறது.எனவே, அரசு துறைகளின் கீழ் செயல்படும், எல்லா குறை தீர்வு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதை கண்காணிக்க, ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவை.

மக்கள் குறைகளை, உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றுக்கு தீர்வு காண, மேலாண்மை திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, 'முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்க ப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்' ஒன்றை, அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை வழியாக, 12.78 கோடி ரூபாய் செலவில் செயல் படுத்தப்படும். முதல் கட்டமாக, ௧௦௦ இருக்கைகள் உள்ள, உதவி மையமாக செயல்படும். பின், தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும்.குறை தீர்க்கும் மனுக்களை பெறும் போது, வேலை வாய்ப்பு கோரும் மனுக்களே அதிகமாக உள்ளன. எனவே, இந்த மையங்களில் பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை கள் வழியாக, உடனுக்குடன் பரிசீலிக்கப்படும்.


விரைந்து தீர்வு



தேவைப்பட்டால் மனு தாரர்களுக்கு, திறன் மேம் பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, உரிய வேலைவாய்ப்பு வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த திட்டத்தால், பல்வேறு அரசு துறைகள் தொடர்பான குறைகளை, பொது மக்கள், ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த மனுக்கள், முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தால், உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காணப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X