அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கர்நாடகாவை அனுமதிக்க மாட்டோம்'

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:''கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே அணை கட்ட, தமிழக அரசு அனுமதிக்காது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட, பிரதமரை சந்தித்து, அனுமதி கோரப் போவதாக, கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். மேலும், 'அணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. எப்படியும் அனுமதி பெற்று, அணை கட்டுவோம்' என, கூறியுள்ளார். மத்தியிலும், கர்நாடகாவிலும், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.எனவே, அனைத்து கட்சி தலைவர்கள் அல்லது சட்டசபை கட்சி தலைவர்களை அழைத்து சென்று, பிரதமரை சந்தித்து, அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என, முதல்வர் வலியுறுத்த வேண்டும். அல்லது, முதல்வர் தலைமையிலான குழுவாவது சென்று வலியுறுத்த வேண்டும். இப்பிரச்னை யில், முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வர்: உச்ச நீதிமன்றம், ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. நமக்கு வழங்கப் பட வேண்டிய நீர்,முழுமையாக வழங்கப்பட வேண்டும்.அதுமட்டுமல்ல, இந்த நீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என, உச்ச நீதிமன்றத்தில் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.இது குறித்த பிரச்னையை, நான்கு முறை, காவிரி மேலாண்மை ஆணையத்திடம், கர்நாடகா எடுத்து சென்றது. நாம் கடுமையாக ஆட்சேபனை செய்த நிலையில், அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இது குறித்த வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

எனவே, எந்த வகையிலும், மேகதாது அணை கட்ட, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நமக்கு சாதகமாக இருக்கிறது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X