அரசியல் செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை தீர்மானங்களுக்கு வருகிறது ஆபத்து: ஸ்டாலின் அச்சம்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:''அண்ணா தந்த தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - நரசிம்மன்: திருத்தணி தொகுதி, மத்துார் கிராமத்தில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் தங்கமணி: தற்போது, அப்பகுதியில் மின் அழுத்த குறைபாடு இல்லை. எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.

நரசிம்மன்: நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. எனவே, அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். அதேபோல், திருத்தணியிலும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் தங்கமணி: மத்துார் கிராமத்தில், இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இடம் கிடைத்ததும், துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: இந்த சட்டசபையில், இருமொழி கொள்கை, மாநில சுயாட்சி, தமிழ்நாடு பெயர் சூட்டி, தீர்மானங்களை நிறைவேற்றியவர், அண்ணாதுரை. அவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்ற உறுதியை, அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.சென்னை, கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நேர்மை நகரில், துணை மின் நிலைய பணியை விரைவாக முடிக்க வேண்டும். கணேஷ் நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணியை துவக்க வேண்டும்.

அமைச்சர் தங்கமணி: நேர்மை நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக, பணி நிறுத்தப்பட்டது; விரைவில், பணி முடிக்கப்படும். கணேஷ் நகரில், துணை மின் நிலையம் அமைக்க, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது. அந்தப் பணியும் விரைவாக துவக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202006:29:28 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து திராவிட மாயை அகலும் நேரம் ...சுடலை கூவுகிறது ..
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
16-செப்-202002:56:35 IST Report Abuse
Baskar அண்ணாவை பற்றி பேசவே யோக்கியதை கிடையாது உனக்கு. avar vakuttha கொள்கைகளை உன்னை போல் யாரும் காற்றில் பறக்கவிட வில்லை. உனக்கு தேவை படும் பொது அண்ணா பெரியார் இவர்களை நினைப்பதை. கருணாநிதி உயிரோடு இருக்கும் பொது போஸ்டரில் பெரியார் நா போன்ற தலைவர்கள் படம் நிச்சயம் இடம் பெரும். ஆனால் இப்போது உன் அப்பன் படத்தையே காணோம். திருடர்களின் படமும் அவர்களின் தலைவன் என்று சொல்லி கொள்ளும் உன் படம் இப்போ உதவாக்கரை உதயநிதியின் படமும் தான் உள்ளது. இப்போ பெரியாரும் அண்ணாவும் பேசிக்கொள்கிறார்கள் எவ்வளவு கழட்டப்பட்டு வளர்த்த கட்சி இப்படி சீரழிகிறது பாருங்கள் என்று பேசி கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X