அரசியல் செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் தொழில் துவங்க சலுகை

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:''தென் மாவட்டங்களில், தொழில் துவங்க வருவோருக்கு சலுகை வழங்கப்படுகிறது. ''அங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது,'' என, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க.,- - சண்முகையா: துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் தொழிற்சாலை அமைக்க, அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் எம்.சி.சம்பத்: தொழில் முனைவோர் முன்வந்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சண்முகையா: ஒட்டப்பிடாரம் தொகுதி, மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. அங்கு தொழில் ஏற்றுமதி பூங்கா அமைக்க வேண்டும்.

அமைச்சர் எம்.சி.சம்பத்: தென் மாவட்டங்களில், தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்பதற்காக, தென் மண்டலத்திற்கு உட்பட்ட, 10 மாவட்டங்களில், தொழில் துவங்க முன்வருவோருக்கு, சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.மேலும், தொழிற் பூங்காக்கள் அமைப்பதற்காக, 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

ஒட்டப்பிடாரம் தொகுதியில், ஒட்டப்பிடாரம், வீரபாண்டியபுரம் பகுதியில், தொழிற்பூங்கா விற்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.மதுரை -- துாத்துக்குடி தொழில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. துாத்துக்குடியில் தொழில் துவங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. விரைவில், தொழிற்சாலைகள் துவக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X