பொது செய்தி

தமிழ்நாடு

ராஜவாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

தொண்டாமுத்தூர்:நொய்யல் ஆற்றின், கிளை வாய்க்காலில், தூர்வாரி, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோவையின் முக்கிய நீராதாரமாக, நொய்யல் ஆறு விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக, நொய்யலாற்றை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து வந்தது. இதனையடுத்து, 230 கோடி ரூபாய் மதிப்பில், நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான, சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து உருவெடுக்கும் கீழ்சித்திரைச்சாவடி வாய்க்கால் மற்றும் குனியமுத்தூர் வாய்க்கால் பகுதியில் தூர்வாரி, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.வேடபட்டி முதல் வீரகேரளம் கிருஷ்ணாம்பதி குளம் வரையிலான, ராஜவாய்க்காலை தூர்வாரி, இருபுறமும் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.குளத்திற்கு நீர் செல்வதற்கு முக்கியத்துவம் அளித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X