பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசியில் பலத்த மழை

Added : செப் 16, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது.அவிநாசி பகுதியில், சில நாட்களாக, பகல் நேரத்தில் மந்தமான காலநிலை நிலவுகிறது. இரவில், குளிர் அதிகமாக உள்ளது. நேற்று மாலை, அவிநாசி பகுதியில், பலத்த மழை பெய்தது. ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவிநாசி உள்ளிட்ட சுற்றுப்புறங்களில், ரோட்டோரம் குழாய் பதிக்கும் பணியும், ரோடு விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. தோண்டப்படும் குழி, சரிவர மூடப்படுவதில்லை. இதனால், ரோட்டோரம் சேறு, சகதி நிறைந்து, மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில், டூவீலர் வாகன ஓட்டிகள் சிக்கித்திணறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X