பொது செய்தி

இந்தியா

உதான் விமான சேவை: தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
உதான் விமான சேவை: தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

'சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதோடு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்துக்கும், உதான் விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திதர வேண்டும்' என, தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தனர்.

விமானச் சட்டம் 1934ல், முக்கிய திருத்தங்களை செய்து, புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கியிருந்தது. நேற்று, ராஜ்யசபாவில் இம்மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று, அ.தி.மு.க.,- எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:நாடு முழுதும் விமானபோக்குவரத்து சேவையை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது தான்.




அரசு ஒப்புதல்



அதேவேளையில், தமிழகத்தில், பல முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தேவையாக உள்ளது. குறிப்பாக, தொழில் நகரமான ஓசூருக்கு விமான போக்குவரத்து மிகவும் அவசியம்.சிறு நகரங்களுக்கும் விமான சேவையை ஏற்படுத்தி தரும் உதான் திட்டத்தின் கீழ், ஓசூருக்கும் விமான சேவை ஏற்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இதை, மத்திய அரசு கண்டிப்பாக நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு, தம்பிதுரை பேசினார்.தி.மு.க., - எம்.பி., வில்சன் பேசியதாவது:விமானப் போக்கு வரத்து துறையை சீரமைக்காமல் விட்டதால் தான், பல முக்கிய தனியார் விமான நிறுவனங்கள் நஷ்டங்களை சந்தித்து, இத்துறையை விட்டே போய்விட்டன.


மிகவும் அவசியம்



கட்டணம் மற்றும் வழித்தடங்களை ஒழுங்குபடுத்தவில்லை எனில், சாதாரண மக்களுக்கு, விமானப்பயணம் சாத்தியமாகாது. இத்துறையும் லாபத்தை ஈட்டிவிடாது.சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டியது மிகவும் அவசியம். மதுரை, கோவை, திருச்சி போன்ற விமான நிலையங்களையும், தற்போது இருப்பதை காட்டிலும், மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் தேவை.

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்துக்கும், உதான் விமான போக்குவரத்து சேவையை, உடனடியாக ஏற்படுத்தி தர, மத்திய அரசு முன்வர வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை சட்டத்தைப்போல, விமான நிலையங்களை விரைந்து அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்தவும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு வில்சன் பேசினார்.விவாதத்தின் முடிவில், இம்மசோதாவுக்கு, ராஜ்யசபா ஒப்புதல் தந்ததை அடுத்து, 'விமான சட்டம் 2020' என்ற புதிய சட்டம் பிறந்துள்ளது.


புதிய சட்டம்



விமானங்களின் உற்பத்தி, உடைமை, செயல்பாடு, விற்பனை மற்றும் விமானங்களை இயக்குவதற்கான உரிமை ஆகிவற்றை, இச்சட்டம் ஒழுங்குபடுத்தவுள்ளது.மேலும், விமான போக்குவரத்து இயக்குனரகம், விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம், விமான விபத்து புலனாய்வு நிறுவனம் ஆகிய அனைத்தையும், சட்ட ரீதியிலான அமைப்புகளாக, இப்புதிய சட்டம் மாற்றப்போகிறது.


'நீட்' கொலைக்கருவியை எப்போது கீழே போடுவீர்கள்?



லோக்சபாவில், மதுரை எம்.பி.,வெங்கடேசன் பேசியதாவது:'நீட்' எனும் திரிசூலத்தின் ஒருமுனை, மாநில கல்வி உரிமையை குத்தி கிழிக்கிறது. இன்னொரு முனை, 'டீச்சிங்கை' கொன்று, 'கோச்சிங்கை' கொண்டாடுகிறது. மற்றொரு முனை, உளவியலை சிதைத்து தற்கொலையை துாண்டுகிறது.தமிழகத்தில், 12க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரண துயரத்தில் இருந்து, கேட்கிறோம். நீட் என்ற கொடிய கொலைக்கருவியை, இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணத்திற்கு பிறகு கீழே போடுவீர்கள்.இவ்வாறு, அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
16-செப்-202008:40:42 IST Report Abuse
Balasubramanian Ramanathan வாய் நல்லாதான் கிழியுது. விமான நிலைய விரிவிக்கம் அல்லது புதிய விமான நிலையங்கள் கட்ட நிலம் கையகப்படுத்த ஆரம்பித்தால் போராட்டத்தை தூண்டி விடுவது. அப்பாவி மக்களை தீக்குளிக்க வைப்பது, தற்கொலைகளை தூண்டி விடுவது என ஈடுபடுவதூம் இவிங்க கட்சிகள் தான். மனசாட்சி என்று ஒன்று வேண்டும். கையில் மைக்க எடுத்தா எல்லாம் ஊத்தம புத்திரர்களாக மாறிவிடுகிறார்கள். 2010இல் காங்கிரஸ் திமுக கூட்டணி நீட் தேர்வு என்ற திரிசூலத்தை எடுத்தபோது அன்பரின் கட்சி காரர்கள் அனைவரும்கேண்டின்ல டீ சாப்பிட போயிட்டாங்களோ. வேடதாரிகள்.
Rate this:
Cancel
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு சென்னை விமான நிலையத்தில் சுத்தமும் இல்லை, குளிர்சாதனம் இயங்குகிறதா என்றும் தெரியவில்லை, இருக்கும் விமான நிலையத்தை ஒழுங்காக பராமரிக்கட்டும், ஓகர் - தூத்துக்குடி விமானம் சேவை வந்தால் ஏராளமான தென் தமிழக மக்களுக்கு உபயோகமாக இருக்கும், என்னைப் போன்று பெங்களூருவில் இருப்பவர்கள் அதிகம் பயன்படும், என் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் செல்ல காரில் சென்றால் 2 மணி நேரம் ஆகிறது, பேருந்தில் சென்றால் இன்னும் அதிக நேரம் செலவாகும் ,
Rate this:
Cancel
16-செப்-202001:16:45 IST Report Abuse
Gopalakrishnan S Gopalakrishnan S
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X