அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:சபாநாயகர் இருக்கை முன், தர்ணாவில் ஈடுபட்ட, காங்., -- எம்.எல்.ஏ.,க்கள், சபை காவலர்களால், குண்டுகட்டாக வெளியில் துாக்கிச் செல்லப்பட்டனர்.

சட்டசபையில் நேற்று, 'நீட்' தேர்வு தொடர்பாக, விவாதம் நடந்தது.

தர்ணாவிவாதத்தில், அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ., இன்பதுரை பேசுகையில், ''நீட் தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு தரக்கூடாது என, உச்ச நீதிமன்றத்தில், காங்., தலைவர் சிதம்பரம் மனைவி நளினி வாதாடினார். ''எனவே, நீட் தேர்வு குறித்து பேச, காங்கிரசுக்கு தகுதி இல்லை,'' என்றார்.

'சபையில் இல்லாதவர் குறித்து பேசக்கூடாது. எனவே, இன்பதுரை பேசியதை நீக்க வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்; சபாநாயகர் ஏற்கவில்லை.அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி, எம்.எல்.ஏ.,க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், காளிமுத்து, பாண்டி ஆகியோர், சபாநாயகர் தனபால் இருக்கை முன் வந்து, இன்பதுரை பேசியதை நீக்கும்படி வலியுறுத்தினர்.

அப்போது, முதல்வர் எழுந்து, ''உறுப்பினர் நடந்ததை தான் கூறினார். ''நீட் தேர்வு நடத்துவதில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என, நளினி சிதம்பரம் வாதாடினார். அதைத் தான் உறுப்பினர் கூறினார்,'' என்றார்.

முற்றுகையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம், ''உங்களுக்கு பேச வாய்ப்பு தருகிறேன். அப்போது, மறுப்பு தெரிவியுங்கள். தற்போது இருக்கைக்கு செல்லுங்கள்,'' என, சபாநாயகர் கூறினார்.அதை ஏற்க மறுத்த காங்., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபடத் துவங்கினர். அவர்களை வெளியேற்றும்படி, சபைக் காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.


வலியுறுத்தல்

காவலர்கள் உள்ளே வந்து, காங்., -- எம்.எல்.ஏ., ராஜேஷ்குமாரை, குண்டுக்கட்டாக துாக்கிச் சென்றனர். மற்றவர்களை துாக்க முயன்றதும், அவர்கள் எழுந்து வெளியே சென்றனர். வெளியேற்றப்பட்ட பின், ''அவர்களை இன்று சபைக்கு வர அனுமதிக்க வேண்டும்,'' என, சபாநாயகரிடம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார். ''இன்றைய கூட்டத்தில், அவர்கள் பங்கேற்கலாம்,'' என, சபாநாயகர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
16-செப்-202012:16:19 IST Report Abuse
Balasubramanian Ramanathan தலபுராணம் படிக்க கூடாதாமே. என்ன குஞ்சுமணி இதேல்லாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X