நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பு

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதி ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள சாக்கடை கழிவுநீர், நீர்நிலைகளில் கலப்பதை தடுக்கும் விதமாக கட்டமைப்பு உருவாக்க உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் கூறியதாவது:மடத்துக்குளம் தாலுகா பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, கிராமப்பகுதிகளில் சாக்கடை கட்டப்பட்டு, அவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக செல்லும் வாய்க்கால்களில் கலக்கும் விதமாக கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.அப்போது மக்கள் தொகை குறைவாக இருந்த காரணத்தால் சாக்கடைகள் அதிக அளவில் நீர்நிலைகளில் கலக்கவில்லை. சில இடங்களில் வாய்க்கால்களுக்கு முன்பே உள்ள தரிசு நிலங்களிலேயே காய்ந்து விட்டன. இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்படவில்லை. பின்னர் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்து, கடந்த 20 ஆண்டுகளில் சாக்கடை கட்டமைப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது அதிகளவு சாக்கடை கழிவுகள் வாய்க்கால்களில் கலக்கின்றன.குமரலிங்கம், கடத்துார், காரத்தொழுவு, கணியூர், உள்ளிட்ட பல பகுதிகளில், இதுபோல கலக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, உள்ளாட்சி அமைப்புகள் கிராமம் மற்றும் நகரப்பகுதியில் உள்ள சாக்கடைகள், எந்தவித நீர்நிலைகளிலும் கலக்காமல் தரிசு நிலங்களில் தேக்கப்பட்டு, காய்ந்து விடும்படி சாக்கடை கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X