பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பும் நிலையில் அணைகள்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 நிரம்பும் நிலையில் அணைகள்

வால்பாறை:பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 69.18 அடியாக உயர்ந்தது.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை மூன்று முறை நிரம்பியது.கடந்த சில நாட்களாக மீண்டும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதோடு, அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.கனமழையினால் வால்பாறையில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடரும் மழையால், சோலையாறு அணை நீர்மட்டம் நேற்று காலை, 161.63 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,192 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு, 2,287 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 69.18 அடியாக உயர்ந்தது. அணை நிரம்ப மூன்று அடி மட்டுமே நீர்மட்டம் உயர வேண்டியுள்ளது.சோலையாறு அணை நிரம்பியுள்ள நிலையில், பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X