பொது செய்தி

தமிழ்நாடு

கே.பி.ஆர்., கல்லுாரியில் பொறியாளர் தின விழா

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:கே.பி.ஆர். பொறியியல் கல்லுாரியில், நாட்டின் பொறியாளர்களின் தந்தை என போற்றப்படும் தலைசிறந்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவின், பிறந்தநாள் தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கே.பி.ஆர்.நிறுவனங்களின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கொடிசியா தலைவர் ராமமூர்த்தி பேசுகையில், ''கே.பி.ஆர். பொறியியல் கல்லுாரி, மாணவர்களின் எந்தவிதமான புதிய முன்னோடி கண்டுபிடிப்புகளுக்கும் கொடிசியா துணை நிற்கும்,'' என்றார். இயந்திரவியல் துறைத்தலைவர் குணசேகரன் வரவேற்றார்.மாணவர் மற்றும் பேராசிரியர்களின் தலைசிறந்த படைப்புக் கருவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. கல்விச் சேவையாற்றிய, 17 பள்ளிகள் மற்றும் 8 பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரியின் முதன்மை செயலர் முனைவர் நடராஜன், முதல்வர் அகிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X