பொது செய்தி

தமிழ்நாடு

முடங்கிய கொட்டைப்பாக்கு தொழில் மீண்டு வருகிறது! நேரடி கொள்முதல் மையத்துக்கு கோரிக்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement
முடங்கிய கொட்டைப்பாக்கு தொழில் மீண்டு வருகிறது! நேரடி கொள்முதல் மையத்துக்கு கோரிக்கை

பேரூர்;கொட்டைப்பாக்கு தொழில் மீண்டு வரும் நிலையில், நியாயமான விலை கிடைக்க, கோவையில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார் ஒன்றியம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில், 1,979 எக்டர் பரப்பளவில் பாக்கு மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
ஒரு ஏக்கருக்கு, 700 பாக்கு மரங்கள் பயிரிடப்படுகின்றன; ஒரு மரத்தில், 40 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படுகிறது.நாட்டு மரத்தில் ஏக்கருக்கு சராசரியாக, 5 ஆயிரம் கிலோவும், வீரிய ரகங்களில், 10 ஆயிரம் கிலோவும் விளைச்சல் கிடைக்கும். அறுவடையாகும் பாக்குகள் சூறு, சிப்ஸ், கொட்டை, உருண்டை உள்ளிட்ட ரகங்களாக, உற்பத்தி செய்யப்படுகின்றன.பச்சைப் பாக்குக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு உள்ளதால், கேரளா, அசாம் மாநிலங்களில் இருந்தும் கொள்முதலாகிறது. தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் மட்டும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கு உற்பத்தியாகிறது.ரூ.1000 கோடி வர்த்தகம்!இங்கு தயாரிக்கப்படும் முதல்தர பாக்குகள், கர்நாடகாவின் சாம்ராட்டில் உள்ள 'கேம்கோ' நிறுவனத்துக்கு செல்கிறது. மற்றவை பான்மசாலா நிறுவனங்களுக்கு விற்பனையாகிறது. இத்தொழில் வாயிலாக, ஆண்டுக்கு சராசரியாக, ரூ.1,000 கோடி வரை வர்த்தகம் நடக்கும்.நடப்பாண்டு பாக்கு சீசன், ஜூன் மாதத்தில் துவங்கியது.
அப்போது, நோய்த்தொற்று பீதியால் அசாம் மாநிலத்தவர், சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தற்போது, அவர்கள் திரும்பி வருகின்றனர்; தொழில் மீண்டு வருகிறது.குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், வியாபாரிகள் வருகின்றனர். ஆனால், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால், உற்பத்தியாளர்களுக்கு உழைப்புக்கு, ஏற்றவிலை கிடைப்பதில்லை.நேரடி கொள்முதல் மையம்இதனால், கோவையில் பாக்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.பாக்கு உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், 'இடைத்தரகர்களால் நியாயமான விலை கிடைப்பதில்லை. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அதன் விலையில் சரிபாதி வேறுபடும். கேம்கோ நிறுவனம் கேரளா, கர்நாடகாவில் பாக்குக்கு நல்ல விலை கொடுக்கிறது.பொள்ளாச்சி, ஆனைமலை, தாராபுரம் பகுதிகளில், அந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.
ஆனால், சாக்லெட் தயாரிப்புக்காக, 'கோகோ'வை மட்டுமே கொள்முதல் செய்கிறது; பாக்கு கொள்முதல் இல்லை.தற்போது, சூறு ரகம் கிலோ, ரூ. 450, கொட்டை, ரூ. 350, சிப்ஸ், ரூ. 370, உருண்டை, ரூ. 330க்கும் விற்பனையாகிறது; முதலீடு கூட கிடைக்காது.எனவே, கோவையில் பாக்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தால், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து தப்பிப்போம்.இதற்கு, கொங்கு மண்டல அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர்.தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இந்த துவர்ப்பு தொழிலுக்கு விரைவில் இனிப்பான செய்தி கிடைக்கும் என்று நம்பலாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X