பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகத்தில் வாசிப்பதற்கும் புத்தகம் மாற்றவும் அனுமதி

Added : செப் 16, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு கிளை நுாலகத்தில், வாசகர் மட்டுமே வந்து, புத்தங்களை மாற்றி செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அடிவாரத்தில், கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுாலகம் மூடப்பட்டது. கடந்த, 1ம் தேதி முதல் கிளை நுாலகங்கள் திறக்க அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, கிணத்துக்கடவு கிளை நுாலகம் திறக்கப்பட்டு, காலை, 9:00 முதல் மதியம், 12:30 மணி வரை செயல்பட்டு வருகிறது.இங்கு நாளிதழ்கள் வருவதில்லை. பொதுமக்கள் அமர்ந்து படிப்பதற்கு அனுமதியில்லை. வாசகர்கள் மட்டுமே வந்து, புத்தங்களை மாற்றி எடுத்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இந்த கிளை நுாலகத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். தற்போது, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாமல் உள்ளதால், மாணவ, மாணவியர்களின் பெற்றோர், வாசகர்கள் புத்தங்களை மாற்றி செல்ல நுாலகத்திற்கு வருகின்றனர். நுாலகத்திற்கு வரும் வாசகர்கள், முகக்கவசம் அணிந்தும், உள்ளே வந்தவுடன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்கின்றனர். வாசகர்களின் விபரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. தினமும் வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறித்து, தலைமை நுாலகத்திற்கு மதியம், 12:30 மணிக்கு தெரிவிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X