பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நினைவிடம் புதுப்பிப்பு பணி துவக்கம்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 எம்.ஜி.ஆர்., நினைவிடம் புதுப்பிப்பு பணி துவக்கம்

சென்னை:எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை புதுப்பிக்கும் பணியை, பொதுப்பணி துறையினர் துவக்கி உள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர்., நினைவிடம் உள்ளது. இதன் பின்பகுதியில், ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி, 58 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இதற்கு, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அக்டோபர் இறுதியில் நினைவிடம் திறக்கப்படும் என, கூறப்படுகிறது. எனவே, இறுதிக்கட்ட பணிகளை பொதுப்பணி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை புதுப்பிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. அங்குள்ள உடைந்த மற்றும் பழைய டைல்ஸ் கற்களை அகற்றி விட்டு, புதிய கற்கள் பதிக்கப் பட்டு உள்ளன; அழகிய பூச்செடிகள், புற்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளை அடித்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எம்.ஜி.ஆர்., அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணியும் இரவு, பகலாக நடந்து வருகிறது. இப்பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என, பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Vardhini - Coimbatore,இந்தியா
16-செப்-202007:28:40 IST Report Abuse
Raja Vardhini மக்கள் திலகம், மனித நேயன், பொன்மனச்செம்மல், ஏழைமக்களின் காவலன், தான் பதவியிலிருந்த பத்து ஆண்டுகளில், தன் பெயரில் ஒரு சென்ட் நிலம் கூட வாங்காத பெருந்தகையாளன், கடினமாக உழைத்து சம்பாதித்த தனது சொத்துக்களை தமிழக மக்களுக்கு அள்ளி கொடுத்த வள்ளல், திமுக என்ற கொடிய கட்சியிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றிய காவலன்.. இப்படி பெரும் பேர் பெற்ற அந்த வள்ளலுக்கு நினைவிடம் வைப்பதிலோ, அதனை புதுப்பிப்பதிலோ எவ்வித தவறும் இல்லை.யார் யாருக்கோ மெரினாவில் இடம் உள்ள போது, மக்களின் தலைவன் எம்.ஜி.ஆர். நினைவிடம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என் போன்ற தமிழர்களின் ஆசை. ஏழை குழந்தைகளின் பசியை போக்கிய அந்த உத்தமன் வாழ்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X